Lumix S1H is the First Netflix Approved Mirrorless Camera By Vijay Armstrong

Comments · 2598 Views

டிஜிட்டல் போட்டோகிராஃபியில், முக்கியமான மாற்றங்கள் பல, கடந்த சில வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கிறது.

Lumix S1H is the First Netflix Approved Mirrorless Camera By Vijay Armstrong

 


டிஜிட்டல் போட்டோகிராஃபியில், முக்கியமான மாற்றங்கள் பல,  கடந்த சில வருடங்களாக நடந்துக் கொண்டிருக்கிறது.

- முதல் மாற்றம், SLR, DSLR வரிசையில் இப்போது Mirrorless Cameras. 'Epson' நிறுவனம் 2004 இல் Mirrorless Camera-வைக் கண்டுபிடித்த போதும், 2008-இல் பேனாசோனிக் தன்னுடைய Lumix G1 மூலம் சந்தைக்கு கொண்டுவந்தது. இன்று வரை தொடர்ந்து Mirrorless கேமராக்களை சந்தைப்படுத்துகிறது. அண்மையில் தான் Canon மற்றும் Nikon நிறுவனங்கள் தங்களுடைய Mirrorless Camera கேமராக்களை அறிமுகப்படுத்தி இருக்கின்றன. Mirrorless Cameras தான் எதிர்காலம் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்.

- இரண்டாவது.. கேமராக்களின் Sensor Size யுத்தம். ஒரு கேமராவிற்கு, 'சென்சார்' தான் அதன் உயிர்நாடி என்பதை நாம் அறிவோம். சிறிய சென்சார்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக பெரிய சென்சார்களை நோக்கி கேமரா நிறுவனங்கள் நகர்கின்றன.

1/3.2"(4.54mm x 3.42mm)) இருந்து Full Frame(36mm x 24mm) என்று சொல்லப்படும் பெரிய சென்சார் வரை மாற்றம் கண்டிருக்கிறது. இன்றைய தேதியில் Full Frame Sensor கேமராக்கள் தான் மார்கெட்டை தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன. அவ்வகையில் Canon, Nikon, Sony, Panasonic நிறுவனங்களுக்கிடையே பலமான போட்டி நடந்துக்கொண்டிருக்கிறது. யார் அதிக மார்கெட்டை பிடிப்பது என்று..



Canon, Nikon போன்ற நிறுவனங்கள் காலம் காலமாக, போட்டோகிராஃபி துறையில் பலமான இடத்திலிருப்பவைகள். இடையில் Sony தன்னுடைய Alpha a7 சிரியஸ் கேமராக்கள் மூலம், போட்டோகிராஃபித்துறையில் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டி வருகிறது. Panasonic நிறுவனம் காலம் காலமாக வீடியோத்துறையில் ஜாம்பவானாக இருக்கிறது. குறிப்பாக திருமண வீடியோச் சந்தையில். இந்திய மட்டுமல்ல, உலகமுழுவதும் திருமண வீடியோகிராபர்களிடையே பேனாசோனிக் கேமராக்கள் பிரபலம்.

2008-இல் தன்னுடைய Micro Four Thirds Mirrorless கேமராவான Lumix G1 மூலம் புகைப்படத்துறையில் தானும் ஒரு போட்டியாளர் என்று பேனாசோனிக் களத்தில் குதித்தது. 'Lumix' என்ற புதிய Brand-இல் அதன் புகைப்படக்கேமராக்கள் வருகின்றன. சின்ன சென்சார்கள் பயன்பாட்டிலிருந்து போது, 'Micro Four Third' சென்சாரை முதன் முதலில் அறிமுகப்படுத்தியது பேனாசோனிக் நிறுவனம் தாம். அன்றையத் தேதியில் அது பெரிய சென்சார். தொடர்ந்து கடந்த ஆண்டுவரை தன்னுடைய எல்லா புகைப்படக்கேமராக்களையும் Micro Four Third சென்சாராகவே வைத்திருந்தது. எதிர்புறத்தில் மற்ற நிறுவனங்கள் Full Frame கேமராக்களை தொடர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தன. இந்நிலையில் இவ்வாண்டின் துவக்கத்தில் பேனாசோனிக் தன்னுடைய Full Frame கேமராக்கள் இரண்டை அறிமுகப்படுத்தியது.



Lumix S1 மற்றும் Lumix S1R என்றழைக்கப்பட்ட அக்கேமராக்கள், பல சிறப்பு அம்சங்களை கொண்டிருக்கிறது. 4K, Full Frame கேமராக்களான இவை, அறிமுகமான நாளிலிருந்து இன்றுவரை உலக முழுவதும் பலத்த வரவேற்பைப் பெற்று வருகின்றன. மற்ற  Full Frame Camera-க்களை விட இக்கேமராக்களில் சிறப்பு அம்சம், இது முழுமையான  Full Frame சென்சார் கேமரா என அறியப்படுகிறது. காரணம் மற்ற நிறுவனங்களின்  Full Frame கேமராக்கள் தங்களுடைய சென்சாரின் முழு பரப்பளவையும் பயன்படுத்தி படம் பிடிப்பதில்லை. Full Frame சென்சார் இருந்தபோதும், அதில் குறிப்பிட்ட பகுதி மட்டும்தான் படம் பிடிக்க பயன்படுத்துகின்றன. அதனை APS-C(23.60mm x 15.60mm), APS-H (27.90mm x 18.60mm) சென்சார்கள் என்றும் அழைக்கின்றன. ஆனால் Lumix S1 / S1R கேமராக்கள் சென்சாரை முழுமையாக(36.00mm கx 24.00mm) பயன்படுத்துகிறது. இதனால், இதன் பிம்பங்கள் சிறப்பானவையாக இருக்கின்றன.



- மூன்றாவது.. புகைப்படக்கேமரா, வீடியோ கேமரா என்றும் தனித்தனியாக இருந்த கருவிகள், இன்று ஒரே கேமராவிற்குள் இணைந்திருக்கின்றன. Hybrid Camera என்றழைக்கப்படும் இவ்வகை கேமராக்கள் Photos மற்றும் Videos எடுக்கவல்லன. Canon தன்னுடைய EOS 5D மூலம் இதை பிரபலமாக்கியது. இன்று ஏறக்குறைய எல்லா நிறுவனங்களும் hybrid camera-களை வைத்திருக்கின்றன. வீடியோக்களுக்கென்று தனியாக கேமராக்கள் இருக்கின்றன. ஆயினும் hybrid camera-க்கள் தங்களுடைய சந்தையை விரிவு படுத்தி வருகின்றன.

 
- நான்காவது.. வீடியோக்களின் தரம், Full HD-இலிருந்து 4K-விற்கு மாறி இருக்கிறது. உலகம் 4K வீடியோவிற்கு தயாராகிவிட்டது. 4K TV, 4K Mobile, 4K Camera என எல்லாம் 4K மயமாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த மாதம் பேனாசோனிக் Lumix S1H என்ற புதிய கேமராவை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இக்கேமரா 6K,Full Frame கேமராவாகும். சினிமாத்துறைக்கும் பயன்படும் வண்ணம் இக்கேமரா இருக்கிறது.

அதாவது, சினிமாத்துறைக்கென பல்வேறு கேமராக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ARRI, RED போன்ற நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கின்றன. Canon, Sony, Panasonic, Black Magic போன்ற நிறுவனங்களும் சினிமாக்கேமராக்களை தயாரிக்கின்றன. என்றாலும் தற்போது பேனாசோனிக் அறிமுகப்படுத்தி இருக்கும் Lumix S1H கேமரா, Full Frame Mirrorless கேமராவாகும். அதாவது புகைப்படம் எடுக்கப்பயன்படும் கேமராவில் 6K வீடியோவும் எடுக்க முடிகின்றன Hybrid கேமராவாகும்.



இக்கேமராவைத்தான், Netflix தன்னுடைய திரைப்படங்களை எடுக்க ஏதுவான கேமரா என அங்கிகரித்திருக்கிறது இப்போது. அதென்ன அத்தனை முக்கியமான முடிவா?

ஆம்.. அப்படித்தான் பார்க்கப்படுகிறது. காரணம். Netflix நிறுவனம் தன்னுடைய தளத்திற்கென தயாரிக்கப்படும் திரைப்படங்கள், தொடர்கள் போன்றவை தரமானதாக இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த கண்டிப்போடு இருக்கிறது. கதைக்களன் மட்டுமல்ல, தொழில்நுட்ப தரத்திலும் எவ்விதத்திலும் குறைந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அதனால், தன் தயாரிப்புகளிளும், தனக்காக தயாரிக்கப்படும் திரைப்படங்களையும் குறிப்பிட்ட கேமராக்களை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் பரிந்துரைக்கிறது.

அதில், இதுவரை ARRI,RED,CANON,BLACK MAGIC,SONY,PANASONIC நிறுவனங்களின் சினிமாக்கேமராக்கள் மட்டுமே இருந்தது. இப்போது முதல் முறையாக ஒரு Mirrorless Camera-வை தன்னுடைய தயாரிப்புகளுக்கு பயன்படுத்தலாம் என்று அங்கரித்திருக்கிறது எனில், Lumix S1H கேமரா, சினிமாக்கேமராக்களுக்கு இணையான தரம் கொண்டிருக்கிறது என்றே அர்த்தம். இது இத்துறையில் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. காரணம், இத்தனை ஆண்டுகளாக Full Frame கேமராக்களில் இராஜியம் செய்துக்கொண்டிருந்த Canon, Sony, Nikon கேமராக்களை பின்னுக்கு தள்ளி விட்டு Panasonic, தன்னுடைய Lumix S1H மூலம் போட்டியில் முந்தி இருக்கிறது என்றே உலகம் இதைப்பார்க்கிறது.

ஏன் Netflix.. இக்கேமராவை அங்கிரத்திருக்கிறது..? அதிலிருக்கு சிறப்பம்சங்கள் என்ன என்ன? என்பவற்றை அடுத்த கட்டூரைகளில் பார்ப்போம்..



 
Comments
Arul Jothi 4 yrs

Super information your always great cinematographer sir