ஒளிப்பதிவு-தொழில்நுட்பம் Foreground Interest and Depth

Comments · 6688 Views

ஒளிப்பதிவு-தொழில்நுட்பம் கற்றதும் பெற்றதும்.. யாவருக்கும்..!

Foreground Interest and Depth

 
 
 
 
Foreground Interest and Depth:
 
Including some foreground interest in a scene is a great way of adding a sense of depth to the scene. Photographs are 2D by nature. Including foreground interest in the frame is one of a number of techniques to give the scene a more 3D feel.
 
ஒரு காட்சியை படம் பிடிக்கும் போது, Foreground-இல் ஏதோனும் ஒன்றை இடம்பெற செய்யும் போது, அக்காட்சி சுவாரசியமாகும் என்கிறார்கள். இப்படங்களில், படம் B-இல், அந்திப்பொழுதின் வானமும், தூரத்து மலையின் வடிவமும், ஒன்றைப்புள்ளியாய் ஒளிரும் நட்சத்திரமும், தூரத்தில் தெரியும் விளக்கொளியும் நமக்கு அழகைத் தருகின்றன. ஆயினும், அக்காட்சியின் முன் பக்கத்தில் , ஒரு வீட்டையும் இணைக்கும் போது (படம் A), அக்காட்சி இன்னமும் சுவாரசியமானதாக, கவர்ச்சிகரமானதாக மாறுவதாக, புகைப்படயயலின் விதிகள் சொல்லுகிறது.
 
அது புகைப்படத்துறையோ, ஓவியத்துறையோ அல்லது ஒளிப்பதிவுத்துறையோ… இத்துறைகளில் பின்பற்றப்படும் சில ‘Composition Techniques’ உண்டு. இவைகள், ஒரு வகையான வழிகாட்டி தான். இப்படி செய்வதன் மூலம், உங்களின் காட்சியை சுவாரசியமானதாக்கலாம் என்ற வழி காட்டி இது. பல்வேறு புகைப்படக்கலைஞர்களால், பல்வேறு புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, அதில் எது சுவாரசியமானதாகப்படுகிறது? அது ஏன்? என்ற அனுபவத்தின் அடிப்படையில் சொல்லப்படும் வழிகாட்டி நுட்பங்கள் இவை. இதை அப்படியே பின்பற்ற வேண்டுமென்பதில்லை. பின்பற்றினால், உங்கள் புகைப்படங்கள் சுவாரசியமாகும் என்பதுதான், இதன் பலம்.
 
கமல் சொன்னதைப்போன்றுதான்... “கடவுள் இல்லைன்னு சொல்லல.. இருந்தால் நல்லதுன்னுதான் சொல்றேன்”
 
“பின்பற்ற வேண்டுமென்று சொல்லவில்லை.. பண்ணினா நல்லதுன்னுதான் சொல்றேன்” ???
 
 
 
---------------------------------
இரண்டு படங்களில் வித்தியாசத்தை, சிலர் குறிப்பிட்டது மட்டும் இங்கே
 
 
B பொதுவாக தனிமையும் அமைதியான சூழலையும் நான் விரும்புவேன் ஆகையால் எனக்கு B பிடித்திருக்கிறது

--

A - the interesting foreground sets the context brilliantly. ?

--

B - In a frame as B such great than A
As my knowledge of framework is smart coz without this Building( கட்டடம் சட்டக இடைத்துருத்தலாகிறது)?

--

A is my option. It tells a story. In fact some uniqueness to that particular story. Though some might argue option B is also telling a story... It's a generic story, that could fit any story.
A's building light n texture adds a beautiful blocking to the scene.
?
 
--

முதல் படம் ஆப்ஜெக்ட் எனும் வாழ்விடம் பின்னணியில் இயற்கை சார்ந்த வாழ்விடங்கள் கொண்டதில் தனித்தன்மை மற்ரும் தனிமை சூழல் இருப்பினும் இப்படி எடுக்கப்படும் படங்களே மிக சிறந்த படமே மனதில் ஆழமான மகிழ்ச்சியை தருகிறது...!

--

B - பரந்த வானமும் இருண்ட ஊரும் தடையில்லாமல் நம் மனதிற்கு நெருக்கமாக்குகிறது. இயற்கையின் வண்ணங்களும், ஒற்றை நிலவும் வீட்டில் ஒளிரும் ஒற்றை விளக்கொளியும் கூடுதல் கவித்துவத்தை ஏற்படுத்துகிறது. மகிழ்வோ துயரமோ காதலோ நம் மனதின் எவ்வகை உணர்வுகளுக்கும் எளிதாய் பொருந்திக்கொள்ளும் அழகிருக்கிறது. ...இன்னும் இப்படி நிறைய சொல்லிக்கொண்டேபோகலாம் தல...

--

மரம் அல்லது கட்டிடம் ஃப்ரேமின் ஓரத்தில்.. குறிப்பாக.. இடது ஓரத்தில்..வருவது ஃப்ரேமின் அழகை கூட்டும். - A

--
படம் A எனக்கு பிடித்திருக்கிறது, காரணங்கள். B.வெறுமை நிறந்த வானம், கருமையான நிலப்பரப்பும். தொலைதூர விடிவெள்ளியும் முடிவில்லா சிந்தனையை வளர்க்கிறது. A. கட்டிடத்தின் கவர்ச்சியான பகுதியாக இல்லை என்றாலும், ஜன்னலில் தெரியும் மஞ்சள் வெளிச்சம் கம்பிகளின் நிழல் உயிரோட்டமாக உள்ளது. கடல் சூழ்ந்த நிலம் போன்ற ஒரு பூகோள அமைப்பை உணர முடிகிறது. விடிவெள்ளி, ஜன்னல் ஒளி, தெரு விளக்கு மூன்று மூன்று வெளிச்சங்கள் ஒரு முக்கோண புள்ளியில் இணைவதுபோல உள்ளது. படம் A - முழுமையான ஒளியோவியம். படம் B - முடிவடையாத ஓவியம். இரண்டு படங்களும் அதிகாலை விடியலாக இருக்கலாமோ என்று தோன்றுகிறது( சரியாக தெரியவில்லை). பொதுவாக B தனியாக இருந்தால் அது நன்றாக இருக்கிறது என்றே சொல்ல தோன்றும்.

By Vijay Armstrong at April 21, 2020

ஒளிப்பதிவு-தொழில்நுட்பம்

Comments